search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் தத்தளிப்பு"

    • கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது.
    • மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர்.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியை சே்ாந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த 4 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அதனை பார்த்த மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் படகுகள் மூலம் அவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர்.

    மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் மீனவர்களை கரைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்கலில் தூத்துக்குடிக்கு வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்கள் வந்த பைபர் படகு அலையில் சிக்கி நிலை தடுமாறி கவிழ்ந்தது.
    • கடலில் மூழ்கிய படகு கரை ஒதுங்கியது படகில் இருந்த வலைகள் கடல் நீரில் மூழ்கியது.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 46). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (21), ரவி (24), மணிபால் (35) மற்றும் ரஞ்சித் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

    அப்போது நடுக்கடலில் மீன்களை பிடித்து விட்டு வீடு திரும்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் வந்த பைபர் படகு அலையில் சிக்கி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் வந்த 4 பேரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர். இதை பார்த்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அலையில் சிக்கிய 4 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித் மற்றும் ரவி மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேலும் கடலில் மூழ்கிய படகு கரை ஒதுங்கியது படகில் இருந்த வலைகள் கடல் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் மீனவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    கடலில் பலத்த காற்று வீசியதால் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்கள் தத்தளித்தனர். இதையடுத்து அவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாதவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ், பிரதீப், பால்ராஜ் ஆகிய 4 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் இருந்து 17 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் எதிர்பாராதவிதமாக படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்த மாதவன் உள்பட 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். பின்னர் காப்பற்றுங்கள்.... காப்பற்றுங்கள்.... என கூச்சலிட்டனர். இதைக்கண்ட அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேரையும் மீட்டு தங்களது நாட்டுப்படகில் ஏற்றினர். பின்னர் இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கரையில் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் 4 பேரும் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்ததால் அதில் இருந்த வலை, மீன்பிடி உபகரணங்கள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் தமிழக அரசு சேதமடைந்த பொருட்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×